Wednesday, November 25, 2026
spot_img
Homeகனடா செய்திகள்ஒட்டாவாவில் உணவு வங்கியை நாடுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

ஒட்டாவாவில் உணவு வங்கியை நாடுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

ஒட்டாவா நகரில் உணவுப் பற்றாக்குறை மற்றும் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு காரணமாக, உணவு வங்கிகளை நாடுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

ஒட்டாவா உணவு வங்கியின் 2024 – 2025 ஆண்டு அறிக்கையின்படி, கடந்த ஆண்டில் அதன் வலையமைப்பின் ஊடாக 5 இலட்சத்து 88 ஆயிரத்து 866 தடவைகள் மக்கள் உணவு உதவியைப் பெற்றுள்ளனர்.

இது கொரோனா பெருந்தொற்றுக்கு முந்தைய 2019ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இரு மடங்குக்கும் அதிகமான அதிகரிப்பாகும்.

மேலும், 67 சமூக அமைப்புகள் ஊடாக 92 உணவுத் திட்டங்களை முன்னெடுத்து வரும் இந்த அமைப்பு, தேவையுடைய மக்களுக்காக சுமார் 79 இலட்சம் பவுண்ட் உணவுப் பொருட்களை விநியோகித்துள்ளது.

குழந்தைகள், குறைந்த வருமானம் பெறுவோர் மற்றும் குடும்பங்கள் உள்ளிட்ட பலரும் உணவு உதவியை நாடி வருவதாக அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

வீட்டு வாடகை, உணவுப் பொருட்களின் விலை மற்றும் அத்தியாவசியச் செலவுகள் அதிகரித்து வரும் நிலையில், ஒட்டாவாவில் உணவுப் பாதுகாப்பு தொடர்பான நெருக்கடி தீவிரமடைந்து வருவதை இந்தப் புள்ளிவிபரங்கள் வெளிப்படுத்துகின்றன.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments