Wednesday, November 25, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்விடுதலைப் புலிகளுக்கு நிதி சேகரித்த வழக்கு

விடுதலைப் புலிகளுக்கு நிதி சேகரித்த வழக்கு

விடுதலைப் புலிகள் இயக்​கத்​தின் மறுசீரமைப்பு நட​வடிக்​கைகளுக்கு நிதி திரட்டுவதற்​காகஇ சர்​வ​தேச அளவி​லான போதைப்​பொருள் கடத்தலுக்கு உடந்​தையாக இருந்​த​தாக இலங்​கையைச் சேர்ந்த முகமது அஸ்மினுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 2021-ம் ஆண்டு கேரளாவின் விழிஞ்​ஞம் கடற்​கரைக்கு அருகே இலங்கை படகில் 300 கிலோவுக்கு அதிகமான ஹெராயின் போதைப்​பொருள் 5 ஏகே-47 துப்பாக்கிகள் மற்றும் 1000 தோட்​டாக்​கள் பறி​முதல் செய்யப்பட்டன.

இது தொடர்​பான வழக்​கில் இலங்​கையைச் சேர்ந்த முகமது அஸ்மினை 2022-ம் ஆண்டு டிசம்​பர் மாதம் தேசிய புலனாய்வு முகாமை (என்​ஐஏ) கைது செய்​தது. தடைசெய்​யப்​பட்ட விடுதலைப் புலிகள் இயக்​கத்​தின் மறுசீரமைப்பு நட​வடிக்​கைகளுக்கு நிதி திரட்டியதாக குற்றம்சாட்டியது.

இதனிடையே சிறை​யில் இருந்த முகமது அஸ்​மின் இந்த சதித் திட்​டம் மற்​றும் இதில் தொடர்​புடைய சக குற்​றவாளி​கள் குறித்த முழு​மையான தகவல்​களை தாமாக முன்​வந்து வாக்​குமூலமாக அளித்​தார்.

மேலும் இவ்​வழக்​கில் அரசுத் தரப்பு சாட்​சி​யாக மாறினார். இதனை ஏற்​றுக்​கொண்ட என்​ஐஏ சிறப்பு நீதி​மன்​றம் கடந்த 2023-ம் ஆண்டு அவருக்கு மன்​னிப்பு வழங்கி உத்​தர​விட்​டது.

இந்​நிலை​யில் நீண்ட காலமாக சிறை​யில் இருந்து வரும் தனக்கு பிணை வழங்​கக் கோரி அஸ்​மின் கேரள உயர் நீதி​மன்​றத்​தில் மனுத் தாக்​கல் செய்​திருந்​தார்.

இந்த மனுவை விசா​ரித்த நீதிபதிகள் அடங்​கிய அமர்வு அவருக்கு நிபந்​தனை பிணை வழங்கி உத்​தர​விட்​டது. சிறப்பு நீதி​மன்​றத்​தால் ஏற்​கெனவே மன்னிப்பு வழங்​கப்​பட்டு விட்ட நிலை​யில் அவரைத் தொடர்ந்து சிறை​யில் வைத்​திருப்​பது நியாயமற்​றது என்று நீதிப​தி​கள் குறிப்பிட்​டனர்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments