Wednesday, November 25, 2026
spot_img
Homeகனடா செய்திகள்அவசரகால நடவடிக்கைகளை வலுப்படுத்த மனிடோபா அரசுக்கு பரிந்துரை!

அவசரகால நடவடிக்கைகளை வலுப்படுத்த மனிடோபா அரசுக்கு பரிந்துரை!

மனிடோபா மாகாணத்தில் கடந்த 2025ஆம் ஆண்டு ஏற்பட்ட கடுமையான காட்டுத்தீ அனர்த்தத்தைத் தொடர்ந்து, எதிர்காலத்தில் இத்தகைய அவசரநிலைகளைச் சிறப்பாகக் கையாள்வதற்கான புதிய பரிந்துரைகள் வெளியிடப்பட்டுள்ளன.

கடந்த திங்கட்கிழமை வெளியிடப்பட்ட சுயாதீன ஆய்வறிக்கையின்படி, 2025 மே முதல் ஒக்டோபர் வரை மாகாணத்தில் 445 காட்டுத்தீச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

இதனால் சுமார் 22 இலட்சம் ஹெக்டேயர் நிலப்பரப்பு தீக்கிரையானதுடன், 59 சமூகங்கள் பாதிக்கப்பட்டு, சுமார் 33 ஆயிரம் பேர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது.

இந்த அனர்த்தத்தை அடிப்படையாகக் கொண்டு, அவசரகால முகாமைத்துவச் சட்டங்களை நவீனப்படுத்துதல், உள்ளூர் சமூகங்களின் மீட்பு நடவடிக்கைகளை வலுப்படுத்துதல், அரசாங்கங்களுக்கும் மீட்புக் குழுக்களுக்கும் இடையிலான ஒருங்கிணைப்பை மேம்படுத்துதல் உள்ளிட்ட பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையில், தாம்சன் பகுதியில் புதிய காட்டுத்தீத் தடுப்பு மையம் அமைத்தல், 19 தீயணைப்பு வீரர்கள் மற்றும் 15 அவசரகால முகாமைத்துவப் பணியாளர்களை இணைத்தல், அவசரகாலத் தொடர்பாடல் மற்றும் மீட்புப் பணிகளுக்காக 12 இலட்சம் டொலர் முதலீடு செய்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மாகாண அரசு ஏற்கனவே ஆரம்பித்துள்ளது.

2025ஆம் ஆண்டின் பேரனர்த்தத்திலிருந்து கிடைத்த அனுபவங்களின் அடிப்படையில், எதிர்காலத்தில் மக்களையும் சமூகங்களையும் சிறப்பாகப் பாதுகாப்பதே இந்தப் புதிய பரிந்துரைகளின் முக்கிய நோக்கமாகும்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments