Monday, November 23, 2026
spot_img
HomeUncategorizedகியூபெக் பண்ணைகளில் விலங்குகள் மீது கொடூரமான சித்திரவதை – அரசாங்கம் புதிய நடவடிக்கை!

கியூபெக் பண்ணைகளில் விலங்குகள் மீது கொடூரமான சித்திரவதை – அரசாங்கம் புதிய நடவடிக்கை!

கியூபெக் மாகாணத்தில் உள்ள பண்ணைகளில் விலங்குகள் துன்புறுத்தப்படுவது தொடர்பான அதிர்ச்சியூட்டும் உண்மைகள் வெளியாகியுள்ளன.

ரேடியோ கனடாவின் Enquête நிகழ்ச்சி நடத்திய மூன்று ஆண்டுகால விசாரணையில், கியூபெக்கின் சுமார் 100 பண்ணைகளில் பதிவு செய்யப்பட்ட காணொளிகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன.

இதில், கால்நடைகள் தாக்கப்படுவது, காயமடைந்த விலங்குகளுக்குச் சிகிச்சை வழங்கப்படாமல் இருப்பது, பன்றிக் குட்டிகள் கொடூரமாகக் கொல்லப்படுவது உள்ளிட்ட பல அதிர்ச்சியூட்டும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

குறிப்பாக, சில பண்ணைகளில் விலங்குகள் மிகக் குறுகிய இடங்களில் அடைத்து வைக்கப்படுவதுடன், வலியைக் குறைக்கும் மருந்துகள் இன்றியே சில நடைமுறைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த விவகாரத்தில், கியூபெக்கின் தற்போதைய விலங்கு நலச் சட்டம் பண்ணை விலங்குகளுக்குப் போதிய பாதுகாப்பை வழங்கத் தவறுவதாக விலங்கு உரிமை அமைப்புகள் குற்றம்சாட்டியுள்ளன.

இதற்குப் பதிலளிக்கும் வகையில், கியூபெக்கின் புதிய விவசாய அமைச்சர் பேர்னார்ட் செவினி, பண்ணை விலங்குகளின் பாதுகாப்புக்குப் புதிய கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்தவும், விலங்கு நல ஆய்வுப் பொறுப்பை விவசாய அமைச்சிடமிருந்து வேறு அமைச்சுக்கு மாற்றவும் திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் விவசாயிகள் சங்கமும் கவலை வெளியிட்டுள்ளதுடன், சில பண்ணைகளில் இடம்பெற்ற சம்பவங்களை வைத்து ஒட்டுமொத்த விவசாயத் துறையையும் குற்றம்சாட்டக் கூடாது எனத் தெரிவித்துள்ளது.

விலங்குகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான சட்டத்திருத்தங்கள் அவசியம் என்ற கோரிக்கை தற்போது கியூபெக் மாகாணத்தில் வலுப்பெற்றுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments