Sunday, October 11, 2026
spot_img
Homeபொது செய்திகள்நவராத்திரி இன்று ஆரம்பம்!

நவராத்திரி இன்று ஆரம்பம்!

இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான நவராத்திரி விரதம் இன்று (11)  தொடங்குகிறது.

நவராத்திரியின் முதல் மூன்று நாட்களும் அம்பிகையை துர்க்கையாக, பராசக்தியாக மற்றும் காளியாக உருவகப்படுத்தி வழிபடுவது ஐதீகமாகும்.

நவராத்திரியின் முதல் நாளான இன்று காலையில் எளிய முறையில் ஏதாவது ஒரு பழம் மற்றும் கற்கண்டு ஆகியவற்றைப் படைத்து வழிபாட்டைத் தொடங்கலாம்.

மாலையில் நைவேத்தியம் படைத்து வழிபட வேண்டும். முதல் நாள் என்பதால் வெண்பொங்கல், சர்க்கரை பொங்கல் அல்லது சுண்டல் ஆகியவற்றைச் செய்து படைக்கலாம்.

குறிப்பிட்ட மலர்கள் அல்லது நைவேத்தியங்கள் தான் கிடைக்க வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது; தமக்கு இயன்றவற்றைக் கொண்டு பக்தி சிரத்தையுடன் வழிபடலாம்.

காலையில் பழங்கள் படைத்து அம்பிகைக்குரிய ஸ்தோத்திரங்கள் அல்லது பாடல்களைப் பாடி வழிபட வேண்டும்.

மாலையில் குங்குமம் மற்றும் மலர்களால் அர்ச்சனை செய்து, அபிராமி அந்தாதி, லலிதா சகஸ்ரநாமம், துர்காஷ்டகம், காமாட்சி அஷ்டகம் அல்லது 108 அம்பாள் போற்றி மந்திரங்களைச் சொல்லி மனதாரப் பிரார்த்திக்கலாம்.

இறுதியில் தீப தூப ஆராதனை காட்டி பூஜையை நிறைவு செய்து, வீட்டிற்கு வருகை தருபவர்களுக்குப் பிரசாதம் மற்றும் தாம்பூலம் வழங்கி மகிழலாம்.

முதல் மூன்று நாட்கள் துர்கா தேவி (பராசக்தி, காளி) வடிவிலான அம்பிகையை வீரியம், தைரியம் மற்றும் தீமைகளை அழிக்கும் சக்தியாகவும் வழிபடுவது வழக்கம்.

அடுத்த மூன்று நாட்கள் மகாலட்சுமி தேவி வடிவில் செல்வம், வளம் மற்றும் அனைத்து வகையான ஐசுவரியங்களையும் வழங்கும் தெய்வமாக அம்பிகையை வழிபட வேண்டும்.

கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதி தேவி வடிவில் கல்வி, ஞானம், கலை மற்றும் அறிவுச் செல்வத்தை அருளும் தெய்வமாக அம்பிகையைச் சிறப்புடன் வழிபட வேண்டும்.

குறிப்பாக, நவராத்திரியின் கடைசி நாளான விஜயதசமி நாளில் கலை, கல்வி மற்றும் தொழிலைத் தொடங்கும் விசேட வழிபாடுகள் மேற்கொள்ளப்படுவது குறிப்பிடத்தக்கது.

நவராத்திரி காலத்தில் பக்திியுடன் அம்பிகையை வழிபட்டால் வாழ்வில் அனைத்து ஐசுவரியங்களும் பெருகும் என்பது ஐதீகமாகும்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments