Saturday, October 10, 2026
spot_img
Homeவிளையாட்டு செய்திகள்புற்றுநோயை வென்று டெஸ்ட் கிரிக்கெட்டுக்குத் திரும்பிய அவுஸ்திரேலிய வீரர்!

புற்றுநோயை வென்று டெஸ்ட் கிரிக்கெட்டுக்குத் திரும்பிய அவுஸ்திரேலிய வீரர்!

புற்றுநோயிலிருந்து மீண்டு வந்துள்ள அவுஸ்திரேலிய வீரர் நிக் மேடின்சன், சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் டெஸ்ட் அணியில் இடம்பிடித்துள்ளமை கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

34 வயதான நிக் மேடின்சன், 18 மாதங்களுக்கு முன்னர் விதைப்பைப் புற்றுநோய்க்காக கீமோதெரபி சிகிச்சை பெற்றிருந்தார். அதிலிருந்து மீண்டு, தற்போது டர்பனில் நடைபெறும் டெஸ்ட் போட்டிக்கான அவுஸ்திரேலிய அணியின் விளையாடும் பதினொருவர் குழுவில் இடம்பிடித்துள்ளார்.

இதற்கு முன்னர் 2016ஆம் ஆண்டு டெஸ்ட் தொடரில் விளையாடியிருந்த அவர், அப்போது எதிர்பார்த்த அளவுக்கு துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கவில்லை. இதனால், நீண்ட இடைவெளிக்குப் பின்னர் அவருக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டமை குறித்து பல்வேறு கருத்துகள் எழுந்தன.

தேர்வுக்குழுத் தலைவர் ஜோர்ஜ் பெய்லி தன்னைத் தொடர்புகொண்டபோது, இந்தியா ஏ அணிக்கு எதிரான தொடரைப் பற்றிப் பேசுவதற்காகவோ அல்லது இளம் வீரர்கள் தொடர்பில் ஆலோசனை பெறுவதற்காகவோ அழைத்திருக்கலாம் என நினைத்ததாக நிக் மேடின்சன் தெரிவித்துள்ளார்.

மீண்டும் டெஸ்ட் அணியில் இடம்பெறுவேன் என எதிர்பார்த்திருந்தாலும், இவ்வளவு விரைவில் அந்த வாய்ப்பு கிடைத்தது ஆச்சரியமளித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்குத் தனது உடற்தகுதி குறித்து கவலைப்படவில்லை எனத் தெரிவித்த அவர், நியூ சவுத் வேல்ஸ் அணிக்காக சிவப்பு பந்து கிரிக்கெட்டில் அதிகம் விளையாடியுள்ளதாகவும் கூறினார்.

இந்நிலையில், டர்பன் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் களமிறங்கிய நிக் மேடின்சன், 33 பந்துகளை எதிர்கொண்டு ஓட்டமெதுவும் பெறாமல் மார்கோ யான்சென் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments