Saturday, October 10, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்கொழும்பில் கூரிய ஆயுதத் தாக்கப்பட்டு ஒருவர் உயிரிழப்பு

கொழும்பில் கூரிய ஆயுதத் தாக்கப்பட்டு ஒருவர் உயிரிழப்பு

கொழும்பு துறைமுக நகரப் பகுதியில் உள்ள தொழிலாளர் தங்குமிடம் ஒன்றிற்கு அருகில், கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த தாக்குதலில் பலத்த காயமடைந்த அவர், மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதைத் தொடர்ந்து இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக 26 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் சம்பவம் குறித்து கொழும்பு துறைமுகப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments