இலங்கையின் ஆறு மாகாணங்கள் மற்றும் மூன்று மாவட்டங்களுக்கு கடுமையான மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் ‘அம்பர்’ எச்சரிக்கையை விடுத்துள்ளது.
இன்று (10) காலை 11 மணிக்கு விடுக்கப்பட்ட இந்த எச்சரிக்கை, நாளை (11) அதிகாலை 1 மணி வரை நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, மேல், சபரகமுவ, மத்திய, ஊவா, வடமேல் மற்றும் தென் மாகாணங்களின் பல பகுதிகளிலும், அனுராதபுரம், மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் கடுமையான மின்னலுடன் கூடிய இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இடியுடன் கூடிய மழையின்போது தற்காலிகமாகப் பலத்த காற்றும் வீசக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, மின்னல் தாக்கத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைப்பதற்குப் பொதுமக்கள் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.


