Tuesday, October 6, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்வெவர்லி தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினைக்கு தீர்வு

வெவர்லி தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினைக்கு தீர்வு

வெவர்லி தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை தொடர்பில் இ.தொ.கா பொதுச்செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில் தீர்வு எட்டப்பட்டுள்ளது.

அக்கரப்பத்தனை பெருந்தோட்ட நிறுவனத்தின் கீழ் உள்ள வெவர்லி தோட்டத் தொழிலாளர்களுக்கு கடந்த மாதமும் இம்மாதமும் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் ரூ.1,350 என்ற அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட சம்பளத்துக்குப் பதிலாக, அவர்களுக்கு உரிய ரூ.1,750 தினசரி சம்பளத்தை கணக்கிட்டு வழங்குவதற்கு நிர்வாகம் உறுதியளித்துள்ளது.

மேலும், ரூ.1,350 என்ற அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட சம்பளத்தை மீள்பரிசீலனை செய்து, எதிர்வரும் 25ஆம் திகதிக்குள் ரூ.1,750 என்ற முழுமையான சம்பள அடிப்படையில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தொழிலாளர்களின் EPF, ETF மற்றும் சேவைக்கால கொடுப்பனவு உள்ளிட்ட சட்டபூர்வ உரிமைகள் பாதிக்கப்படக்கூடாது என ஜீவன் தொண்டமான் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன், எல்பியன் தோட்டத்தில் மூடப்பட்டுள்ள தேயிலைத் தொழிற்சாலையை எதிர்வரும் நவம்பர் 15ஆம் திகதிக்குள் அல்லது தீபாவளிக்கு முன்னதாக மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், வெவர்லி தோட்ட தேயிலைத் தொழிற்சாலையை மீள இயக்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நிர்வாகம் உறுதியளித்துள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments