நாட்டின் பல பகுதிகளில் நாளை (05) பகல் வேளையில் வெப்பம் அதிகரிக்கக்கூடும் என எச்சரித்து வளிமண்டலவியல் திணைக்களம் ‘அம்பர்’ நிற எச்சரிக்கையை விடுத்துள்ளது.
இன்று (04) மாலை 4.00 மணிக்கு இயற்கை அனர்த்தங்கள் குறித்த முன்னெச்சரிக்கை நிலையத்தினால் விடுக்கப்பட்ட இந்த எச்சரிக்கை, நாளை முழுவதும் நடைமுறையில் இருக்கும்.
இதன்படி, வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், மொனராகலை மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் வசிக்கும் மக்களுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதிகளில் பகல் வேளையில் மனித உடல் உணரும் வெப்பநிலையான ‘வெப்பச் சுட்டெண்’ சில இடங்களில் ‘எச்சரிக்கை’ நிலையை அடையக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, வெப்பமான காலநிலையின் தாக்கத்தைக் குறைக்கும் வகையில் பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


