Thursday, October 1, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்ரணிலின் பாதுகாப்பு அதிகாரி தாக்கப்பட்ட சம்பவம் – ஊடகவியலாளர் பொலிஸ் பிணையில் விடுதலை

ரணிலின் பாதுகாப்பு அதிகாரி தாக்கப்பட்ட சம்பவம் – ஊடகவியலாளர் பொலிஸ் பிணையில் விடுதலை

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பாதுகாப்பு அதிகாரி ஒருவரைத் தாக்கியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட, தனியார் ஊடக நிறுவனம் ஒன்றைச் சேர்ந்த ஒளிப்பதிவாளர் ஒருவர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

குறித்த தனியார் ஊடக நிறுவனமொன்றின் ஒளிப்பதிவாளர் இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்காக பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்ட நிலையில் கொம்பனித்தெரு பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் நேற்று (30) இடம்பெற்ற வழக்கு விசாரணைகளின் பின்னர், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெளியே வந்தபோது இந்தத் தாக்குதல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாக்குதலுக்கு இலக்கான பாதுகாப்பு அதிகாரி சிகிச்சைக்காக வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments