இந்தியாவின் மும்பையில் உள்ள ஓட்டல் ஒன்றில் வழங்கப்பட்ட மசாலா தோசைக்குள் இறந்த எலி காணப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையைச் சேர்ந்த அமித் திரிவேதி, தனது இரு சகோதரர்கள் மற்றும் மகனுடன் தென்னிந்திய உணவு உண்பதற்காக குறித்த ஓட்டலுக்குச் சென்றுள்ளார்.
அங்கு மைசூர் மசாலா தோசையை ஆர்டர் செய்து, சில வாய் சாப்பிட்ட பின்னர் உணவுக்குள் வித்தியாசமான பொருள் இருப்பதை அவதானித்துள்ளார்.
தொடர்ந்து உணவை பரிசோதித்தபோது, அதற்குள் சிறிய இறந்த எலி இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், உடனடியாக வாந்தி எடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் அமித் திரிவேதி போரிவலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இந்த முறைப்பாடு மகாராஷ்டிர உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் (FDA) கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டதைத் தொடர்ந்து, குறித்த ஓட்டலின் உணவு வணிக உரிமம் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் உணவுப் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


