வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘சென்னை 28’ படத்தின் 3ஆம் பாகம் படப்பிடிப்பை ஒக்டோபர் முதல் வாரத்தில் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இயக்குநர் வெங்கட் பிரபு ‘சென்னை 28’ படத்தின் மூலம் இயக்குநராக கடந்த 2007ம் ஆண்டில் அறிமுகமானார்.
தனது முதல் படத்திலேயே மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்து தமிழ்த் திரையுலகில் தனக்கென தனியிடத்தைப் பிடித்தார்.
‘சென்னை 28’ படத்தில் எஸ்.பி.பி, சரண், ஜே.கே. சரவணா தயாரிப்பில் உருவான இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா, பிரேம்ஜி அமரன் ஆகியோர் இசையமைத்து இருந்தனர்.
மேலும் இந்த திரைப்படத்தில் சிவா, ஜெய், நிதின் சத்யா, அரவிந்த் ஆகாஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
கிரிக்கெட் விளையாட்டையும் நட்பையும் மையமாகக் கொண்டு நகைச்சுவையாக எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இதனைத் தொடர்ந்து, 2016 ஆம் ஆண்டு இரண்டாம் பாகமான ‘சென்னை 28’ வெளியானது.
இந்த திரைப்படமும் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றதை அடுத்து மூன்றாம் பாக வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது.
இந்த நிலையில், ‘சென்னை 28’ 3ஆம் பாகம் தயாராக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னையில் இதற்கென பிரத்யேகமான அரங்கம் அமைக்கப்பட்டு, ஒக்டோபர் முதல் வாரத்தில் படப்பிடிப்பைத் தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதன் முதல் கட்டப் படப்பிடிப்பு சென்னையில் சுமார் 10 நாட்கள் நடைபெறுகிறது.
முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்த பிறகு, இரண்டாம் கட்ட பணிகள் பேங்கொக்கில் நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.


