Monday, September 28, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்திலீபன் சிலை அகற்றப்பட்டதை கண்டித்து யாழில் போராட்டம்

திலீபன் சிலை அகற்றப்பட்டதை கண்டித்து யாழில் போராட்டம்

யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் தியாகதீபம் திலீபனின் நினைவாலயத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த சிலையை பொலிஸார் அகற்றிச் சென்றதைக் கண்டித்தும், சிலையை மீண்டும் அதே இடத்தில் நிறுவக் கோரியும் இன்று (28) யாழ்ப்பாணத்தில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் ஏற்பாட்டில், திலீபனின் நினைவாலயத்திற்கு முன்பாக இந்தப் போராட்டம் நடைபெற்றது.

திலீபனின் 39ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வின் ஆரம்ப நாளான கடந்த 15ஆம் திகதி நினைவாலயத்தில் சிலை வைக்கப்பட்டிருந்ததுடன், தொடர்ந்து 12 நாட்கள் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன. கடந்த சனிக்கிழமை இறுதி நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்றன.

இந்நிலையில், நேற்று (27) யாழ்ப்பாணம் தலைமைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான 20க்கும் மேற்பட்ட பொலிஸார் இரண்டு பொலிஸ் வாகனங்களில் நினைவாலயத்திற்கு சென்று சிலையை பெயர்த்து எடுத்துச் சென்றதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

இதனைக் கண்டித்தும், அகற்றப்பட்ட சிலையை மீண்டும் அதே இடத்தில் நிறுவ வேண்டும் என வலியுறுத்தியும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments