Sunday, September 27, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்மொறட்டுவையில் விபத்து - ஒருவர் கைது

மொறட்டுவையில் விபத்து – ஒருவர் கைது

மொறட்டுவை, லுனாவ கடற்கரை வீதியின் லுனாவ நாற்சந்திப் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மொறட்டுவை நோக்கிப் பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று லுனாவ நாற்சந்தியில் ‘U’ திருப்பம் மேற்கொள்ள முயன்றபோது மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

பதுளை பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

விபத்துடன் தொடர்புடைய முச்சக்கரவண்டி சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் மொறட்டுவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments