Sunday, September 27, 2026
spot_img
Homeவிளையாட்டு செய்திகள்என் கடைசி உலக கோப்பை: வெளிப்படையாக அறிவித்தார் விராட் கோலி

என் கடைசி உலக கோப்பை: வெளிப்படையாக அறிவித்தார் விராட் கோலி

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், நட்சத்திர வீரருமான விராட் கோலி, தற்போது ஒருநாள் கிரிக்கெட் வடிவில் மட்டும் விளையாடி வருகிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்தியா இழந்தபோது ரோகித் சர்மாவும், விராட் கோலியும் ஒரு நேரத்தில் டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தனர்.

டி20-யில் இருந்து ஓய்வு

அதன்பின் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்ற டி20 உலக கோப்பையை இந்தியா வென்றது. அதோடு டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்தார்.

தற்போது ஒருநாள் போட்டியில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார். அடுத்த ஆண்டு ஆப்பிரிக்கா கண்டனத்தில் 50 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கிறது. இதில் ரோகித் சர்மா, விராட் கோலி இடம் பெறுவார்களா? என்பது நிச்சயமாக தெரியவில்லை.

உலக கோப்பையை வெல்வதே இலக்கு

இவர்களது அனுபவம் அணிக்கு தேவைப்படும் என நினைத்தால், பிசிசிஐ இருவருக்கும் வாய்ப்பு கொடுக்கும். இந்த நிலையில் 2027 உலக கோப்பைதான் தன்னுடைய கடைசி உலக கோப்பை போட்டியாக இருக்கும் என விராட் கோலி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக விராட் கோலி கூறியதாவது:-

2027 உலகக் கோப்பையே இந்தியாவுக்காக நான் விளையாடும் கடைசி உலக கோப்பை போட்டியாக இருக்கப் போகிறது. உலக கோப்பையை வெல்வதே எனது முழுமையான இலக்கு. என்னால் முடிந்த அனைத்தையும் களத்தில் கொடுத்து, கோப்பையை அடைய என்னவேண்டுமானாலும் செய்ய நான் தயாராக இருக்கிறேன்.

இவ்வாறு விராட் கோலி தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments