இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேருந்தொன்றும் தனியார் பேருந்தொன்றும் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்தில் காயமடைந்தவர்கள் மொனராகலை மாவட்ட பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
வெல்லவாயிலிருந்து மொனராகலை நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்து, பயணிகளை இறக்குவதற்காக வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த போது, பின்னால் வந்த தனியார் பேருந்து அதனுடன் மோதியுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மாத்தறையிலிருந்து அம்பாறை நோக்கிப் பயணித்த தனியார் பேருந்தே இவ்வாறு இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்தின் பின்புறத்தில் மோதியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.


