தமிழ் நாட்டில், தாராபுரம் மற்றும் மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் களப் பிரசாரம் தீவிரமாகியுள்ள நிலையில், புதிய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன.
இந்தநிலையில் குறித்த இரண்டு தொகுதிகளிலுமே ‘விஜய் அலை’ இல்லை என்றும், திராவிட முன்னேற்றக்கழகம் மற்றும் அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் ஆகிய இரு கட்சிகளுமே சட்டமன்றத் தேர்தலை விட மிகச் சிறப்பாக தேர்தல் பணியாற்றி வருவதாகவும் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாராபுரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளருக்கு மக்களிடையே கடும் எதிர்ப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரு தொகுதிகளிலுமே கடுமையான இழுபறி நிலை நீடிப்பதால், எந்தக் கட்சி வெற்றி பெறும் என்பதைக் கணிப்பது கடினமாக உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இந்தக் கருத்துக்கணிப்பின் முக்கிய கேள்வியாக புதிய தலைமைச் செயலகம் தேவையா? என்ற கேள்விக்கு தேவையில்லை என்று 76% ஆனோர் குறிப்பிட்டுள்ளனர்.
விஜய் முதல்வராக இருப்பதை விரும்புகிறீர்களா? என்ற கேள்விக்கு விருப்பமில்லை என்று 59% வாக்காளர்கள் கருத்துரைத்துள்ளனர்.
விஜய்யின் ஆட்சியை உடனே கலைக்க வேண்டுமா என்ற கேள்விக்கு 49.2% வாக்காளர்கள் ஆதரவு நிலைப்பாட்டை வெளியிட்டுள்ளனர்.
நடிகர்கள் தனிக்கட்சி தொடங்குவது தொடர்பில் 42% ஆனோர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
73% ஆனோர் வரவேற்கவில்லை என்று கூறியுள்ளனர்.
இந்தநிலையில் ஒக்டோபர் 6-ஆம் திகதியன்று வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது


