Wednesday, September 23, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்கடற்பரப்புகளுக்கான எச்சரிக்கை குறித்து வௌியான அறிவிப்பு

கடற்பரப்புகளுக்கான எச்சரிக்கை குறித்து வௌியான அறிவிப்பு

திருகோணமலை முதல் கங்கேசன்துறை மற்றும் மன்னார் ஊடாக நீர்கொழும்பு வரையிலும், காலி முதல் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலும் உள்ள கடற்பரப்புகளுக்கான எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

இன்று (23) பிற்பகல் 2.00 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை அறிவித்தல் நாளை பிற்பகல் 2.00 மணி வரை செல்லுபடியாகும்.

திருகோணமலை முதல் கங்கேசன்துறை, மன்னார் ஊடாக நீர்கொழும்பு வரையிலும், காலி முதல் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலும் உள்ள கரையை அண்டிய கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 55-65 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என்பதோடு, அப்பகுதிகளில் கடல் அலையானது அவ்வப்போது கொந்தளிப்பாக அல்லது சீற்றமாக காணப்படும்.

புத்தளம் முதல் கொழும்பு, காலி மற்றும் மாத்தறை ஊடாக பொத்துவில் வரையிலும் உள்ள கரையை அண்டிய கடற்பரப்புகளில் அலைகளின் உயரமானது 2.0 – 2.5 மீற்றர் வரை உயரக்கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளன.

எனவே, குறிப்பிடப்பட்ட கடற்பரப்புகளில் கடற்தொழிலில் ஈடுபடும் மீனவர்கள் மற்றும் கடற்சார் சமூகத்தினர் இது குறித்து அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments