Tuesday, September 22, 2026
spot_img
Homeவிளையாட்டு செய்திகள்ஆசிய விளையாட்டுப் போட்டிகள் - இந்தியாவுக்கு முதல் தங்கம்

ஆசிய விளையாட்டுப் போட்டிகள் – இந்தியாவுக்கு முதல் தங்கம்

2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா தனது முதல் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளது.

நகோயாவில் நடைபெற்ற மகளிர் கிரிக்கெட் இறுதிப் போட்டியில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி, இலங்கை அணியை 147 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தங்கப் பதக்கத்தை கைப்பற்றியது.

முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 216 ஓட்டங்களை பெற்றது.

ஸ்மிருதி மந்தனா 45 பந்துகளில் 79 ஓட்டங்களையும், ஷபாலி வர்மா 29 பந்துகளில் 48 ஓட்டங்களையும், ரிச்சா கோஷ் 22 பந்துகளில் 49 ஓட்டங்களையும் விளாசினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 69 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணியின் தீப்தி சர்மா, ஷபாலி வர்மா மற்றும் ஸ்ரீ சரணி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இந்த வெற்றியின் மூலம் இந்தியா ஹாங்சோ ஆசிய விளையாட்டுப் போட்டியில் வென்ற மகளிர் கிரிக்கெட் தங்கப் பதக்கத்தை தக்கவைத்துள்ளது.

இதன் மூலம் 2026 ஆசிய விளையாட்டில் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 1 தங்கம், 4 வெள்ளி, 2 வெண்கலம் என மொத்தம் 7 பதக்கங்களாக உயர்ந்துள்ளது.

மேலும், மகளிர் கிரிக்கெட்டில் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் அதிக தங்கம் வென்ற அணிகள் என்ற சாதனையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் தலா 2 தங்கங்களுடன் உள்ளன.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments