Monday, September 21, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்இலங்கையில் பலத்த மழைக்கு வாய்ப்பு!

இலங்கையில் பலத்த மழைக்கு வாய்ப்பு!

நாட்டின் வடகிழக்கே வங்காள விரிகுடாவின் அந்தமான் கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த 24 மணி நேரத்திற்குள் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இம்மண்டலத்தால் இலங்கைக்கு நேரடி பாதிப்பு ஏதும் இருக்காது என எதிர்பார்க்கப்பட்டாலும், இதனுடன் தொடர்புடைய காற்று வீச்சு காரணமாக, குறிப்பாக நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் மழை நிலைமை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாளை (22) மேல், சபரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என வானிலை ஆய்வுத் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. சில பகுதிகளில் சுமார் 100 மி.மீ வரையிலான பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.

வடமத்திய மாகாணம் மற்றும் மன்னார் மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும். ஊவா மாகாணம் மற்றும் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் பிற்பகல் 2:00 மணிக்குப் பிறகு பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்ய வாய்ப்புள்ளதாக அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அதேவேளை, மத்திய மலைநாட்டின் மேற்குச் சரிவுகள், வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்கள் மற்றும் திருகோணமலை, அம்பாந்தோட்டை, மாத்தளை மாவட்டங்களில் அவ்வப்போது மணிக்கு 40–50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

இடியுடன் கூடிய மழையின்போது ஏற்படும் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களிலிருந்து பாதுகாத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments