நடிகர் ரவி மோகனின் ‘ரவி மோகன் ஸ்டுடியோஸ்’ தயாரிப்பில், அவரே இயக்கி வரும் ‘ஆன் ஆர்டினரி மேன்’ திரைப்படத்தின் இசையமைப்பாளர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நடிகர் யோகி பாபு கதாநாயகனாக நடிக்கும் இத்திரைப்படத்திற்குப் பாடகி கெனிஷா இசையமைக்க உள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது. இதன் மூலம் தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராகக் கெனிஷா தடம் பதிக்கின்றார்.
நடிகர் ரவி மோகன் இயக்கி, தயாரிக்கும் இந்தப் படத்தில் முன்னணி நகைச்சுவை நடிகர் யோகி பாபு முதன்மை வேடத்தில் நடிக்கிறார்.
ரவி மோகன் மற்றும் கெனிஷா இருவரும் பிரிந்துவிட்டதாகச் செய்திகள் வெளியாகி சில மாதங்கள் ஆன நிலையில், தற்போது இருவரும் இணைந்து இந்த திரைப்படத்தில் பணியாற்றுவது கோலிவுட் வட்டாரத்தில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.
யோகி பாபுவின் முதன்மைப் பாத்திரம் மற்றும் கெனிஷாவின் புதிய இசைப்பயணம் காரணமாக ‘ஆன் ஆர்டினரி மேன்’ திரைப்படம் சினிமா ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


