சட்டப்பேரவையில் பேச அனுமதி மறுக்கப்பட்டதாகக் கூறி தி.மு.கவினர் இன்று பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
தமிழக சட்டப்பேரவையில் பொலிஸ், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மீதான பதிலுரையை முதல்வர் விஜய் வழங்கினார். இதன்போது தி.மு.க. ஆட்சியின் ஊழல்கள் குறித்தும் அவர் பேசினார்.
இதனைத் தொடர்ந்து, முதல்வரின் பதிலுரைக்குப் பின்னர் எதிர்க்கட்சியினரை பேச அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி தி.மு.க. உறுப்பினர்கள் பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகரின் இருக்கையை முற்றுகையிட்டு அமளியில் ஈடுபட்டனர்.
தி.மு.கவினரை பேச அனுமதிக்குமாறு முதல்வர் விஜய் கேட்டுக்கொண்ட போதிலும், பேரவைத் தலைவர் அனுமதி மறுத்தார்.
இதையடுத்து தி.மு.க. உறுப்பினர்கள் பேரவையில் தர்ணாவில் ஈடுபட்டதால், அவர்களை வெளியேற்ற அவைக் காவலர்களுக்கு பேரவைத் தலைவர் உத்தரவிட்டார். தொடர்ந்து தி.மு.கவினர் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.


