விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச, எதிர்வரும் பாராளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்ள அனுமதிக்குமாறு சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவிடம் எழுத்துமூல கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தயாரித்துள்ள குறித்த கடிதம், எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம் ஊடாக சபாநாயகருக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இந்தக் கோரிக்கை தொடர்பில் பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் மற்றும் நடைமுறைகளுக்கு அமைய அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, வழக்கமான நடைமுறைகளுக்கு அமைய நாமல் ராஜபக்ச நாளைய (08) பாராளுமன்ற அமர்வில் கலந்துகொள்வார் என எதிர்பார்ப்பதாக எதிர்க்கட்சியின் பிரதம கொறடா கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.


