Monday, August 31, 2026
spot_img
Homeவிளையாட்டு செய்திகள்15 வயதில் புதிய வரலாறு படைத்த வைபவ் சூரியவன்ஷி!

15 வயதில் புதிய வரலாறு படைத்த வைபவ் சூரியவன்ஷி!

துலீப் கிண்ணத் தொடரின் அரையிறுதிப் போட்டியில், சென்ட்ரல் ஜோன் அணிக்கு எதிரான போட்டியில் ஈஸ்ட் ஜோன் அணியின் தலைவராகச் செயற்பட்டு 15 வயதான வைபவ் சூரியவன்ஷி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.

சென்ட்ரல் ஜோன் அணியின் முதல் இன்னிங்ஸின் போது விக்கெட் காப்பாளரான மற்றும் ஈஸ்ட் ஜோன் அணியின் தலைவரான இஷான் கிஷனின் வலது கை மணிக்கட்டில் காயம் ஏற்பட்டது.

இந்த நிலையில் அவர் சிகிச்சைக்காக மைதானத்தை விட்டு வெளியேறியதால், துணை அணித் தலைவராக நியமிக்கப்பட்டிருந்த வைபவ் சூரியவன்ஷி தலைவர் பொறுப்பை ஏற்றார்.

15 வயதே ஆன வைபவ் சூரியவன்ஷி, மூத்த வீரர்கள் அடங்கிய முதன்மை தரவரிசை (First-Class) கிரிக்கெட் போட்டியில் தலைவராகச் செயற்பட்டு புதிய வரலாற்று மைல்கல்லை எட்டியுள்ளார்.

அந்த வாய்ப்பின் மூலம் மொஹமட் ஷமி, முகேஷ் குமார் மற்றும் அபிமன்யு ஈஸ்வரன் போன்ற அனுபவமிக்க சர்வதேச மற்றும் உள்நாட்டு வீரர்களை உள்ளடக்கிய ஈஸ்ட் ஜோன் அணியை இளம் வயதிலேயே வழிநடத்தும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தமை குறிப்பிடத்தக்கது.
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments