Sunday, August 2, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்பொல்கொல்ல அணையின் இரண்டு வான் கதவுகள் திறப்பு!

பொல்கொல்ல அணையின் இரண்டு வான் கதவுகள் திறப்பு!

பொல்கொல்ல மகாவலி அணையின் இரண்டு வான் கதவுகளைத் தலா இரண்டு அடிகள் வீதம் திறப்பதற்கு அதன் பொறியியலாளர் அலுவலகம் இன்று (02) நடவடிக்கை எடுத்துள்ளது.

நாட்டின் பல மாவட்டங்களில் நிலவும் பலத்த மழையுடனான காலநிலை காரணமாக ஏற்படக்கூடிய வெள்ள அபாயத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கிலேயே இவ்வாறு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

இதன் மூலம் வினாடிக்கு 3,940 கனஅடி நீர் விக்டோரியா நீர்த்தேக்கத்திற்கு வெளியேற்றப்படுவதாகப் பொல்கொல்ல மகாவலி அணைக்கட்டுப் பொறுப்புப் பொறியியலாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

மகாவலி கங்கையின் கீழ்நோக்கிய தாழ்நிலப் பகுதிகள் மற்றும் விக்டோரியா நீர்த்தேக்கத்தைச் சார்ந்த தாழ்நிலப் பகுதிகளில் வாழும் மக்கள் இது தொடர்பில் அவதானத்துடன் இருக்குமாறும், தேவைப்படின் பாதுகாப்பான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் மேலும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments