Saturday, August 1, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்மஹர சிறைச்சாலையில் மீண்டும் பதற்றம்!

மஹர சிறைச்சாலையில் மீண்டும் பதற்றம்!

மஹர சிறைச்சாலை வளாகத்தில் மீண்டும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று மாலை ஏற்பட்ட அமைதியின்மை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட போதிலும் மீண்டும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார்.
சிறைச்சாலைக்குள்ளிருந்து துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்களை ஒத்த சில சத்தங்கள் கேட்டதையடுத்து, கைதிகளைப் பார்வையிட வந்திருந்த உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் பொலிஸ் தடைகளை உடைத்துக் கொண்டு செல்ல முற்பட்டுள்ளனர்.

 

இதையடுத்து, பாதுகாப்புப் படையினர் சில அடிகள் முன்வந்து மக்களைக் கட்டுப்படுத்த முற்பட்ட போதே பதற்றநிலை ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்போது, கைதிகளைப் பார்வையிட வந்த உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் பாதுகாப்புத் தரப்பினர் மீது கற்களை வீசித் தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறைச்சாலைக்கு முன்பாகவுள்ள வளாகத்திற்கு நீர்த்தாரை பிரயோக வாகனங்களைக் கொண்டு வரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments