அவசர அனர்த்த நிலைகளின் போது உதவியளிப்பதற்காக நாடளாவிய ரீதியில் 28,000 இளைஞர் யுவதிகளுக்கு முதலுதவி பயிற்சி வழங்கப்படவுள்ளது.
தேசிய இளைஞர் சேவைகள் மன்றம், சுகாதார அமைச்சு மற்றும் பாதுகாப்பு அமைச்சு ஆகியன இணைந்து, அவசர அனர்த்த நிலைகளின் போது உதவியளிப்பதற்காக நாடளாவிய ரீதியில் 28,000 இளைஞர் யுவதிகளுக்கு முதலுதவி பயிற்சியளிக்கும் நடவடிக்கையை இன்று (30) ஆரம்பித்தன.
அதற்கமைய, ஒரு கிராம உத்தியோகத்தர் பிரிவுக்கு இரு இளைஞர் யுவதிகள் வீதம் இந்தப் பயிற்சிக்காகத் தெரிவு செய்யப்படவுள்ளனர்.


