Saturday, July 25, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்80,000 ஐ கடந்த டெங்கு நோயாளர்கள்: மரணம் 59 ஆக உயர்வு

80,000 ஐ கடந்த டெங்கு நோயாளர்கள்: மரணம் 59 ஆக உயர்வு

இலங்கையில் இவ்வருடம் இதுவரை டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 59 ஆக உயர்வடைந்துள்ளது.

அடையாளம் காணப்பட்ட டெங்கு நோயாளர்களின் மொத்த எண்ணிக்கையும் 80 ஆயிரத்தைக் கடந்துள்ளது என்று தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

நாடளாவிய ரீதியில் கடந்த ஜனவரி முதலாம் திகதி முதல் ஜூலை 23 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் மாத்திரம் சுமார் 80,114 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்த மாதத்தில் கடந்த 23 நாள்களில் மட்டும் 24,739 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை நாளாந்தம் வெகுவாக அதிகரித்து வருகின்றது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments