Wednesday, July 22, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்சர்வதேச தரவரிசையில் இலங்கை கடவுச்சீட்டுக்கு கிடைத்த இடம்

சர்வதேச தரவரிசையில் இலங்கை கடவுச்சீட்டுக்கு கிடைத்த இடம்

உலகின் சக்திவாய்ந்த கடவுச்சீட்டுக்கான அண்மைய ஹென்லி குறியீட்டுப் பட்டியலில் இலங்கை 94ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

இலங்கைக் கடவுச்சீட்டைக் கொண்டுள்ளவர்கள் முன்கூட்டிய விசா அனுமதியின்றி அல்லது வருகையின் போது விசா பெறும் வசதியுடன் உலகளாவிய ரீதியில் 39 நாடுகளுக்குப் பயணிக்க முடியும்.

கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த முன்னேற்றம் இலங்கையின் சர்வதேச நடமாடும் உரிமையின் சீரான மீட்சியை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.

குறியீட்டில் உள்ள கீழ்மட்ட நாடுகளைக் காட்டிலும் இலங்கை முன்னிலையில் இருப்பதுடன், லிபியா நாட்டுடன் இணைந்து 94வது இடத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளது.

முன்கூட்டிய விசா தேவையின்றி 227 இலக்குகளுக்கான அணுகலை அடிப்படையாகக் கொண்டு, உலகின் முன்னணி கடவுச்சீட்டு குறியீடுகளில் ஒன்றாக விளங்கும் ஹென்லி நிறுவனம் 199 கடவுச்சீட்டுகளை இந்தத் தரவரிசையில் மதிப்பிட்டுள்ளது.

கடந்த ஐந்து ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கை தற்போது 13 இடங்கள் முன்னேற்றம் கண்டுள்ளது. அதுமட்டுமின்றி, உலகளாவிய பயணங்களை முடக்கிய பெருந்தொற்றுக்குப் பிந்தைய காலப்பகுதிக்குப் பின்னர், இலங்கை பதிவு செய்துள்ள மிக வலுவான நிலைப்பாடாகவும் இது பார்க்கப்படுகிறது.

சுற்றுலா, வர்த்தகம், வேலைவாய்ப்பு மற்றும் தூதரக உறவுகள் ஆகியவற்றில் இலங்கையின் சர்வதேச இணைப்பு மற்றும் இராஜதந்திர உறவுகள் வலுவடைந்து வருவதற்கான சாதகமான அறிகுறியாகவே இந்தத் தரவரிசைப் புள்ளிவிவரங்கள் பார்க்கப்படுகின்றன.

https://cdn.henleyglobal.com/storage/app/media/HPI/Henley%20Passport%20Index%202026%20July%20Global%20Ranking.pdf

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments