Friday, October 23, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்விசாரணைகளை டக்ளஸ் வரவேற்கிறாராம்

விசாரணைகளை டக்ளஸ் வரவேற்கிறாராம்

ஈழமக்கள் ஜனநாயக கட்சி மீது முன்வைக்கப்பட்டு வரும் குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை என வரலாறு நிரூபித்து வருவதாக அக் கட்சியின் செயலாளர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

 

கட்சியின் யாழ்ப்பாண தலைமை அலுவலகமான ஸ்ரீதர் திரையரங்கு கட்டடம் மற்றும் ஊர்காவற்துறை பகுதியில் அமைந்துள்ள கட்சியின் பிரதேச அலுவலகம் ஆகியவற்றில் குற்றப்புலனாய்வு பிரிவினர் நீதிமன்ற அனுமதியுடன் தேடுதலை நடாத்தி இருந்தனர்.

குறித்த தேடுதல் சம்பவம் தொடர்பில் கட்சியின் செயலாளரான டக்ளஸ் தேவானந்தா ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள செய்தி குறிப்பிலையே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த செய்தி குறிப்பில் ,

எமக்கு எதிராக காலத்துக்கு காலம் முன்வைக்கப்படுகின்ற குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை என்பதை வரலாறு நிரூபித்திருக்கின்றது.

எமது யாழ்ப்பாண அலுவலகம் மற்றும் ஊர்காவற்துறை அலுவலகத்தில் குற்றப்புலனாய்வு துறையினர் தேடுதலை மேற்கொண்டனர்.

குற்றப்புலனாய்வு துறையினரின் இந்த தேடுதல் நடவடிக்கைகளை நாம் வரவேற்கிறோம். இவ்வாறான விசாரணைகள் மூலம் நாம் குற்றமற்றவர்கள் என்பது வெளிப்படுகிறது என மேலும் தெரிவித்தார்

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments