நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தின் மின் உற்பத்தி நடவடிக்கைகளை நாளை (22) முதல் மீண்டும் ஆரம்பிக்க முடியும் என தேசிய மின் கட்டமைப்பு செயல்பாட்டு நிறுவனம் (NSO) தெரிவித்துள்ளது.
மின் கட்டமைப்பில் ஏற்பட்ட சமநிலையின்மை காரணமாக கடந்த சனிக்கிழமை நாடு முழுவதும் மின்வெட்டு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டதால், கடந்த இரு நாட்களாகச் சுழற்சி முறையில் மின்சாரத் துண்டிப்புகள் அமுல்படுத்தப்பட்டன.
இந்நிலையில், இன்றும் (21) மின்வெட்டு நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், நாளை முதல் நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தை மீண்டும் தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்க முடியும் என்பதால், மின்வெட்டைத் தொடர்ந்து நடைமுறைப்படுத்த வேண்டிய அவசியம் இருக்காது என NSO மேலும் தெரிவித்துள்ளது.


