2026 பிபா உலகக் கிண்ணக் கால்பந்து தொடரின் 16 அணிகளின் சுற்றில் இடம்பெற்ற விறுவிறுப்பான போட்டியில், எகிப்து அணியை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஆர்ஜென்டினா காலிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
போட்டியின் 15ஆவது நிமிடத்தில் யாசர் இப்ராஹிம் எகிப்து அணிக்கான முதலாவது கோலைப் பெற்றுக் கொடுத்ததுடன், 67ஆவது நிமிடத்தில் மொஸ்தாபா சிகோ இரண்டாவது கோலையும் பெற்றுக்கொண்டார்.
எவ்வாறாயினும், ஆர்ஜென்டினா அணிக்காக லியோனல் மெஸ்ஸி 83ஆவது நிமிடத்தில் ஒரு கோலைப் பெற்று அணியை மீண்டும் போட்டிக்குள் கொண்டு வந்ததுடன், கிறிஸ்டியன் ரொமேரோ 79ஆவது நிமிடத்திலும், மேலதிக நேரத்தின் (90+3) போது என்சோ பெர்னாண்டஸ் பெற்றுக்கொண்ட வெற்றிக் கோலுடனும் ஆர்ஜென்டீனா அணி 3-2 என்ற கணக்கில் வெற்றியைப் பதிவு செய்தது.


