உலகக் கிண்ண கால்பந்து தொடரில், ஜேர்மனியை 2 -1 என வீழ்த்தி ஈக்வடோர் வெற்றிபெற்றது.
குழு E பிரிவில் உள்ள ஈக்வடோர் மற்றும் ஜேர்மனி அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நியூ ஜெர்சி மைதானத்தில் நடைபெற்றது.
ஆட்டத்தின் 9-ஆவது நிமிடத்தில் லெராய் சேன் கோல் அடிக்க ஜேர்மனி அணி 1 – 0 கணக்கில் முன்னிலை பெற்றது.
ஈக்வடோர் 9-ஆவது நிமிடத்திலேயே கோல் அடித்தது. அந்த அணியின் நில்சன் அன்குலோ தனது அணிக்கு முதல் கோலை அடிக்க ஈக்வடோர் அணி 1-1 கணக்கில் சமநிலையை எட்டியது.
ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் 77-ஆவது நிமிடத்தில் ஈக்வடோர் அணியின் கொன்சலோ பிளாடா கோல் அடித்தார்.
இதனால் ஈக்வடார் அணி 2-1 என முன்னிலை பெற்றது.
ஆட்டத்தின் இறுதிவரை ஜேர்மனி கோல் அடிக்காததை அடுத்து ஈக்வடோர் அணி 2-1 கணக்கில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் 2006 ஆம் ஆண்டுக்கு பின்னர் ஈக்வடோர் அணி வௌியேற்றும் சுற்றுக்கு தகுதிப் பெற்றுள்ளது.


