மாத்தறை – தலல்ல வீதியில் இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின.
சம்பவத்தில்40 இற்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
காலியிலிருந்து அம்பாறை நோக்கிச் சென்ற பேருந்து ஒன்றும், தங்காலையிலிருந்து மாத்தறை நோக்கிச் சென்ற பேருந்து ஒன்றும் இவ்வாறு நேருக்கு நேர் மோதிக்கொண்டுள்ளன.
விபத்தில் காயமடைந்தவர்கள் மாத்தறை மற்றும் பதிகம வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


