Tuesday, June 23, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்சிறைக்குச் செல்ல வேண்டியவர்களே அரசுக்கு எதிராக கூட்டணி - ஹந்துன்நெத்தி

சிறைக்குச் செல்ல வேண்டியவர்களே அரசுக்கு எதிராக கூட்டணி – ஹந்துன்நெத்தி

சிறைக்குச் செல்ல வேண்டிய தரப்பினரே தற்போதைய அரசுக்கு எதிராக ஒன்றிணைந்து அரசியல் கூட்டணியமைத்துள்ளார்கள் என அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விசேட நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“கடந்த 2024 ஆம் ஆண்டு நாட்டில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்துஇ ரணில் விக்கிரமசிங்கஇ சஜித் பிரேமதாஸ மற்றும் ராஜபக்ஷக்கள் ஆகியோர் ஒன்றிணைந்து தற்போதைய அரசுக்கு எதிராகத் திட்டமிட்ட சூழ்ச்சிகளை முன்னெடுத்து வருகின்றார்கள். இதுவரை காலமும் இந்த மூன்று தரப்பினருமே மாறி மாறி நாட்டை ஆட்சி செய்தார்கள்.

கடந்த காலங்களில் ரணில் விக்கிரமசிங்க ஆட்சிக்கு வந்தால் மஹிந்த ராஜபக்ஷவின் காலத்து ஊழல்வாதிகளைப் பாதுகாப்பார்இ அதேபோல் மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்தால் ரணில் விக்கிரமசிங்கவின் காலத்து ஊழல்வாதிகளைப் பாதுகாப்பார். இதுவரை காலமும் இந்த உடன்பாட்டின் அடிப்படையிலேயே நாட்டை ஆண்டனர். எனினும்இ கடந்த 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலுடன் இவர்களின் பரம்பரை ஆட்சி முறைமை ஒட்டுமொத்தமாக முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது.

கடந்த காலங்களில் தாங்கள் செய்த ஊழல்களுக்காக நிச்சயம் சிறைக்குச் செல்ல நேரிடும் என்பதை இவர்கள் நன்கு அறிவார்கள். அதன் காரணமாகவேஇ கடந்த காலங்களில் ஒருவரையொருவர் கடுமையாக மோதிக்கொண்டவர்கள் இன்று சுயநலத்துக்காக ஒன்றிணைந்து அரசியல் கூட்டணியமைத்துள்ளார்கள். – என்றார்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments