Tuesday, March 10, 2026
spot_img
Homeசினிமா செய்திகள்பிரசாந் நடிக்கும் ‘வின்னர் 2’ படத்தின் பதிவேற்றம்

பிரசாந் நடிக்கும் ‘வின்னர் 2’ படத்தின் பதிவேற்றம்

சுந்தர் சி இயக்கத்தில் பிரசாந்த் நடிப்பில் 2003-ம் ஆண்டு வெளியான ‘வின்னர்’ படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ‘வைகாசி பொறந்தாச்சு’ என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமானவர் பிரசாந்த். இவர் 90-களின் காலகட்டத்தில் கொடிகட்டிப் பறந்த முன்னணி நடிகர்களில் ஒருவர். கடந்த 2003-ம் ஆண்டு சுந்தர் சி இயக்கத்தில் இவர் நடித்த படம் ‘வின்னர்’. இந்த படத்தில் பிரசாந்துக்கு ஜோடியாக நடிகை கிரண் நடித்திருந்தார். இவர்களுடன் இணைந்து நம்பியார், வடிவேலு, ரியாஸ் கான் மற்றும் பலர் நடித்திருந்தனர்.

இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். ஆக்சன் கலந்த காதல் கதைக்களத்தில் உருவான இத்திரைப்படம் மிகப்பெரும் வெற்றியடைந்தது. அதனை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் உருவாகும் என பேட்டி ஒன்றில் நடிகர் பிரசாந்த் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளதாக புதிய தகவல் வெளிவந்துள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments