ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள உடையாம்பாளையத்தை சேர்ந்தவர் சரவணன். இவருடைய மனைவி மஞ்சுளா இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். அதில் மூத்த மகள், தாத்தா வீட்டில் தங்கி இருந்து 8-ம் வகுப்பு படித்து வரும்நிலையில், தங்கையான அக்ஷயா பெற்றோருடன் இருந்துகொண்டு அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தாள்.
இந்த சூழலில், நேற்று முன்தினம் காலையில் வீட்டில் உள்ள சிறு சிறு வேலைகளை செய்யும்படி அக்ஷயாவிடம் மஞ்சுளா கூறியதாக தெரிகிறது. பின்னர் அவர் வேலைக்கு சென்றுவிட்டார். மாலையில் வேலை முடிந்ததும் வீட்டுக்கு வந்த மஞ்சுளா, சமையல் அறையில் துப்பட்டாவால் தூக்குப்போட்டு அக்ஷயா தொங்கி கொண்டிருந்தாள்.
அதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உடனே அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அக்ஷயாவை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே அக்ஷயா உயிரிழந்துவிட்டாள் என்று தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து கோபி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.