Thursday, March 12, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்சீரற்ற காலநிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 56 ஆக உயர்வு

சீரற்ற காலநிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 56 ஆக உயர்வு

நேற்று இரவு 8.30 முதல் இன்று காலை 7.30 வரையான காலப்பகுதியில் வவுனியா செட்டிக்குளத்தில் அதிகூடிய மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.

அதன்படி குறித்த பகுதியில் 361 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

அத்துடன், முல்லைத்தீவு – அளம்பில் பகுதியில் 313 மி.மீ மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.

கண்டியில் 225 மி.மீ மழைவீழ்ச்சியும் , மன்னார் – மடு பகுதியில் 248 மி.மீ மழைவீழ்ச்சியும், இரத்தினபுரி – மாதம்பே பகுதியில் 283.5 மி.மீ மழைவீழ்ச்சியும் பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதேநேரம் அதிதீவிர வானிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 56 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் 21 பேர் காணாமல் போயுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

12,313 குடும்பங்களை சேர்ந்த 43,991 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளம் மற்றும் மண்சரிவுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments