ஹபரனை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ஹத்தரஸ்கொட்டுவ – மின்னேரியா வீதியில் நேற்று புதன்கிழமை (01) இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஹபரனை பொலிஸார் தெரிவித்தனர்.
வேகக் கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று எதிர்ததிசையில் பயணித்த முச்சக்கரவண்டி ஒன்றுடன் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
ஹபரனை கல்ஓயா பகுதியை வசிப்பிடமாக கொண்ட 56 வயதுடையவரே உயிரிழந்துள்ளார்.
விபத்தில் முச்சக்கரவண்டியின் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹபரனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.