Thursday, January 9, 2025
spot_img
Homeஇரண்டு ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்த நபரின் உடலை தோண்டி எடுக்குமாறு மல்லாகம் நீதிமன்றம் உத்தரவு

இரண்டு ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்த நபரின் உடலை தோண்டி எடுக்குமாறு மல்லாகம் நீதிமன்றம் உத்தரவு

மன்னார் நீதிமன்றத்தில் விபத்து தொடர்பான வழக்கொன்றில் ஆஜராகவேண்டிய 40 வயது நபரொருவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் உயிரிழந்த நிலையில், யாழ். கல்லூண்டாயில் உள்ள சேமக்காலையில் அடக்கம் செய்யப்பட்ட அவரது உடலை உடற்கூற்று பரிசோதனைக்காக தோண்டியெடுக்குமாறு மல்லாகம் நீதிமன்றம் விசேட உத்தரவு பிறப்பித்துள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் மன்னார் – இலுப்பையில் உள்ள வீதி கடவை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த இந்த நபர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார்.

அதன் பின்னர், அவர் நவாலி பகுதியில் வசித்து வந்துள்ளார். அப்போது இவ்விபத்து தொடர்பாக மன்னார் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், அவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் உயிரிழந்தார்.

அவர் மூளைக்காய்ச்சல் காரணமாக உயிரிழந்ததாக வைத்தியர் ஒருவர் தெரிவித்த நிலையில், கிராம சேவகரும் அதற்கிணங்க பூர்வாங்க செயற்பாடுகளை மேற்கொண்டார்.

இந்நிலையில், கல்லூண்டாய் சென். பீற்றர் தேவாலய சேமக்காலையில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.

அதனை தொடர்ந்து, அவர் சந்தித்த விபத்து மன்னார் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

அப்போது விபத்தில் சிக்கிய நபர் அங்கு பிரசன்னமாகவில்லை.

விபத்தில் பாதிக்கப்பட்ட நபர் உயிரிழந்து, அவரது சடலம் யாழ்ப்பாணத்தில் புதைக்கப்பட்ட விடயம் அதன் பின்னரே நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுசெல்லப்பட்டது.

சடலம் புதைக்கப்பட்ட பகுதி மல்லாகம் நீதிமன்ற எல்லைக்குள் உள்ளமையால் இது குறித்து மல்லாகம் நீதிமன்றத்துக்கு அறிவித்தல் வழங்கப்பட்டது.

இந்நிலையில், நாளை (03) சடலத்தை தோண்டி எடுத்து உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்புமாறு மல்லாகம் நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன்படி, நாளைய தினம் மல்லாகம் நீதிமன்ற நீதிவான், சட்ட வைத்திய அதிகாரி, தடயவியல் பொலிஸார் உள்ளிட்ட அதிகாரிகளின் முன்னிலையில் சடலம் தோண்டி எடுக்கப்படவுள்ளது.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments