தேசிய அடையாள அட்டைகளை வழங்கும் நடவடிக்கை தடையின்றி தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாக ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஊடகஅறிக்கையொன்றினை வெளியிட்டு இந்த தகவலை ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தற்போது 15 இலட்சம் விண்ணப்பங்கள் தேசிய அடையாள அட்டைகளை வழங்குவதற்காகக் குவிந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


