நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வரலாற்று சிறப்புமிக்க நுவரெலியா சீதாஎலிய சீதை அம்மன் ஆலயத்தின் 6 உண்டியல்களை நேற்றிரவு (01) உடைத்து பணம் திருடப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த திருட்டு சம்பவம் தொடர்பில் ஆலய நிர்வாகம் பொலிஸ் முறைப்பாடு பதிவுசெய்த நிலையில் நுவரெலியா பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இதன்படி நுவரெலியா சீதாஎலிய சீதை அம்மன் ஆலயத்தின் சனிக்கிழமை (01) இரவு ஆலயத்தின் பின் கதவு வழியாக உள்நுழைந்த திருடர்கள் 6 உண்டியலை உடைத்து அதிலிருந்த இருந்த பணத்தைத் திருடியுள்ளனர்.
இதில் திருடப்பட்ட மூன்று உண்டியல்களை உடைத்து பணத்தை எடுத்துக்கொண்டு ஆலயத்தின் பின்புறத்தில் நீரோட்டம் கொண்ட கங்கையில் வீசி சென்றுள்ளனர். அத்துடன் ஆலயத்தில் உள்நுளைந்த திருடர்கள் தங்களது உருவங்கள் பதிவாகாமல் இருக்க ஆலயத்தில் பிரதான காரியாலயத்தில் முழு ஆலய வளாகத்தை கண்காணிக்கும் சி.சி.டி.வி. கேமராவின் முழு இணைப்பையும் துண்டித்து சென்றுள்ளார்.


