மறைந்த பாடகியும் இளையராஜாவின் மகளுமான பவதாரணியின் பெயரில் பெண்களுக்கான இசைக்குழுவொன்றை இசைஞானி இளையராஜா ஆரம்பித்துள்ளார்.
அவர் தனது உத்தியோகபூர்வ சமூக வலைத்தளத்தில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பவதாரணிக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இந்த முயற்சியை மேற்கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதன்படி குறித்த இசைக்குழுவில் இணைந்துகொள்ள விரும்புவோர் allgirlsorchestra@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு இளையராஜா குறிப்பிட்டுள்ளார்.


