Sunday, June 7, 2026
spot_img
Homeஇந்திய செய்திகள்மதுரை விமான நிலையத்தில் இருவர் கைது

மதுரை விமான நிலையத்தில் இருவர் கைது

இலங்கை கொழும்பில் இருந்து மதுரை வந்த விமானத்தில் போதைப்பொருள் கடத்தப்பட்டு வந்துள்ளதாக சுங்கத்துறை நுண்ணரிவு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் அடிப்படையில் கொழும்பு விமானத்தில் வந்த பயணிகளை தீவிரமாக சோதனையிட்டனர். தஞ்சையைச் சேர்ந்த முகமதுமைதீன் (வயது 26), சென்னையை சேர்ந்த சாகுல்ஹமீது(50) ஆகியோர் மீது சுங்கத்துறை அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர்கள் 2 பேரையும் தனியாக அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.மேலும் அவர்கள் கொண்டு வந்த உடைமைகளையும் சோதனை செய்தனர்.

அப்போது 8 கிலோ ‘ஹைரோ போனிக்’ என்ற உயர்ரக போதைப்பொருளை மறைத்து கடத்தி கொண்டுவந்தது கண்டுபிடிக்கப்பட்டது.இது குறித்து வழக்குப்பதிவு செய்து அவர்களிடம் இருந்த போதைப்பொருளை பறிமுதல் செய்தனர். அந்த 2 பேரையும் கைது செய்தனர். தாய்லாந்தில் இருந்து இந்த போதைப்பொருளை வாங்கி அதனை இலங்கை வழியாக மதுரைக்கு கடத்தி வந்ததாகவும், அதன் இந்திய மதிப்பு ரூ.8 கோடி இருக்கும் எனவும் அதிகாரிகள் கூறினர்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments