சமூக ஊடகங்கள் மூலம் விளம்பரப்படுத்தப்படும் வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் தொடர்பில், நிதி மோசடி சம்பவங்கள் தொடர்பாக பணியகத்திற்கு கிடைக்கும் முறைப்பாடுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE) தெரிவித்துள்ளது.
இந்த விளம்பரங்களில் பெரும்பாலானவை போலியானவை என்றும், அவை பணியகத்திடமிருந்து ஒப்புதல் பெறவில்லை என்றும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
எனவே, வேலை தேடுபவர்கள், அத்தகைய வேலைகளை வழங்கும் நிறுவனம் பணியகத்தின் செல்லுபடியாகும் உரிமத்துடன் சட்டப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதையும், வேலை வாய்ப்பு பணியகத்தால் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதா என்பதையும், பணம் செலுத்துவதற்கு முன்பு அல்லது பயண ஆவணங்களை ஒப்படைப்பதற்கு முன்பு சரிபார்க்க வேண்டும் என்றும் அந்த பணியகம் கோரிக்கை விடுத்துள்ளது.
மேலும், குறித்த மோசடி நிறுவனங்கள் அல்லது தனிநபர்கள் பற்றிய தகவல் யாரிடமாவது காணப்படுமாயின், 0112882228 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அல்லது 1989 என்ற துரித தொலைபேசி மூலமாகவோ சிறப்பு புலனாய்வுப் பிரிவின் காவல் பிரிவுக்கு முறைப்பாடளிக்குமாறு SLBFE கேட்டுக்கொள்கிறது


