திரையுலகைச் சேர்ந்த பல பிரபலங்கள் தங்கள் தனிப்பட்ட விஷயங்களைப் பற்றி வெளிப்படையாக பேசமாட்டார்கள். ஆனால், ஒரு சில பிரபலங்கள் அதனை பொது வெளியில் தயக்கமின்றி பேசுவார்கள். அந்தவகையில், சமீபத்தில், பாபநாசம் பட நடிகை எஸ்தர் அனில் சொன்ன வார்த்தைகள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.
அதாவது, தான் மது அருந்த முயற்சித்ததாகவும், ஆனால், அது தனக்கு சரியாக இருக்காது என்று உணர்ந்ததால் அதை கைவிட்டதாகவும் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், “நான் முதல் முறையாக மது குடித்தபோது, என்னைக் கட்டுப்படுத்த முடியவில்லை. எழுந்திருக்க கூட முடியவில்லை, அந்த சம்பவம் எனக்கு இன்னும் இன்னும் நினைவிருக்கிறது. வீடு திரும்பிய பிறகு, நான் நாள் முழுவதும் தூங்கினேன். அதன்பின் அதை கைவிட்டேன்” என்று தெரிவித்துள்ளார்.


