Wednesday, March 11, 2026
spot_img
Homeசினிமா செய்திகள்"அவர்களின் விவரம் தருங்கள்"- ராகவா லாரன்ஸ்

“அவர்களின் விவரம் தருங்கள்”- ராகவா லாரன்ஸ்

சென்னையில் ரயில்களில் இனிப்பு விற்பனை செய்து வரும் முதிய தம்பதிக்கு உதவி செய்ய நடிகர் ராகவா லாரன்ஸ் முன்வந்துள்ளார்.

இதுகுறித்து தனது எக்ஸ் (X) கணக்கில் பதிவிட்டுள்ள அவர், அந்த தம்பதிக்கு ஒரு லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கத் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

80 வயதான முதியவரும் அவரது மனைவியும் இனிப்பு தயாரித்து விற்பனை செய்வதை இணையதளத்தின் மூலம் அறிந்ததாகவும், அவர்களுடன் தொடர்பு கொள்ள முயற்சித்தபோதும், அவர்கள் பயன்படுத்தியிருந்த செல்போன் எண் வேலை செய்யவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

அந்த தம்பதியின் விவரம் யாருக்குத் தெரிந்தாலும் தன்னைத் தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்களிடம் ராகவா லாரன்ஸ் அழைப்பு விடுத்துள்ளார்.

நடிகர், இயக்குனர், நடன கலைஞர் என பல்வேறு துறைகளில் தன்னை நிரூபித்த ராகவா லாரன்ஸ், உதவி செய்யும் பண்புக்காக திரையுலகத்திலும் ரசிகர்கள் மத்திலும் பெரிதும் பாராட்டப்படுபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments