Thursday, March 19, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்தெஹிவளையில் கழுத்து நெரித்து ஒருவர் கொலை ; சந்தேக நபர் கைது!

தெஹிவளையில் கழுத்து நெரித்து ஒருவர் கொலை ; சந்தேக நபர் கைது!

தெஹிவளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கடற்கரை பகுதியில் கழுத்து நெரித்து ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் தெஹிவளை பொலிஸாரால் நேற்று வெள்ளிக்கிழமை (29) இரவு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இந்த கொலை சம்பவம் கடந்த மே மாதம் 10 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது.

தெஹிவளை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் தெஹிவளை பிரதேசத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்டவர் தெஹிவளை பகுதியைச் சேர்ந்த 38 வயதுடையவர் ஆவார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தெஹிவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments