Sunday, June 7, 2026
spot_img
Homeசினிமா செய்திகள்கமல்ஹாசன் தயாரிப்பில் பிரபுதேவா

கமல்ஹாசன் தயாரிப்பில் பிரபுதேவா

தக் லைப் படத்துக்குபின் ரஜினி, கமல் இணையும் படத்தை தயாரிக்க திட்டமிட்டு இருக்கிறது ராஜ்கமல் நிறுவனம். அந்த படத்தின் பட்ஜெட், வேலைகள் அதிகம் என்பதால் பக்காவான முன்னேற்பாடுகள் நடக்கின்றன. இதற்கிடையில் பிரபுதேவா நடிக்கும் வெப்சீரியல் ஒன்றை இந்த நிறுவனம் சத்தமில்லாமல் தயாரித்து வருகிறதாம். இப்போது இரண்டு படங்களில் பிரபுதேவா நடித்து வருகிறார். சமீபகாலமாக அவருக்கான மார்க்கெட், பிஸினஸ் குறைந்துவிட்டதால், அவர் வெப்சீரியலுக்கு மாறியிருப்பதாக தகவல். காதலா காதலா படத்தில் கமலுடன் இணைந்து நடித்தவர் பிரபுதேவா. கமலின் பல ஹிட் பாடல்களுக்கு நடனம் அமைத்தவர் பிரபுதேவாவின் தந்தையான சுந்தரம் மாஸ்டர். அந்தவகையில் இருவர்களுக்கு இடையில் பல ஆண்டுகள் நட்பு உள்ளது.

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments